உர உற்பத்தித் துறையில் இந்தியாவின் முதல் அன்னிய நேரடி முதலீடு
January 16 , 2018 2888 days 1085 0
நார்வே நாட்டின் மாபெரும் உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா சர்வதேச நிறுவனம் (Yara International) உத்தரப்பிரதேசத்தின் பாபிரலாவில் உள்ள டாடா கெமிக்கல்ஸின் உரத் தொழிற்சாலையை முழுமையாக கையகப்படுத்தியதை அறிவித்துள்ளது.
இது இந்தியாவில் அதிகம் கட்டுப்பாட்டில் உள்ள துறையான உரத் தயாரிப்பில் முதல் அன்னிய நேரடி முதலீடாகக் கருதப்படுகிறது.
சீனாவையடுத்து இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய உரப் பொருட்களுக்கான சந்தை ஆகும்.