TNPSC Thervupettagam

உரத் துறைக்கான பசுமைத் தரக் குறியீடு

July 31 , 2019 2114 days 701 0
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் “தானியங்களினால் தானியம்” என்ற உரத் துறை மீதான பசுமைத் தரக் குறியீட்டின் சமீபத்திய அறிக்கையை புது தில்லியில் வெளியிட்டார்.
  • இந்தப் பசுமைத் தரக் குறியீடானது புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினால் (CSE – Centre for Science and Environment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • நேர்மறைகள் : எரிசக்திப் பயன்பாடு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் இந்தியாவின் உரத் துறையானது உலகில் உள்ள துறைகளில் மிகச் சிறந்த ஒன்றாகும்.
  • குறிப்பிடத்தக்கவை : நீர்ப் பயன்பாடு,  நீர் மாசுபாடு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு மீதான பதிவுகள்.
  • முன்னணியில் உள்ள 3 தொழிற்சாலைகள்
    • உத்தரப் பிரதேசத்தின் ஜகதீஸ்பூரில் உள்ள இந்தோ கல்ப் உரங்கள் அலகு.
    • குஜராத்தில் உள்ள KRIBHCO நிறுவனத்தின் ஹசிரா அலகு.
    • கர்நாடகாவில் உள்ள மங்களூருவின்  பனம்பூரில்  உள்ள இரசாயனங்கள் மற்றும் உரங்களின் அலகு.
  • 1980 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட CSE ஆனது இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் மீதான ஒரு கொள்கை அமைப்பாக செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்