TNPSC Thervupettagam

உரிமத்தினை மீண்டும் இந்தியாவிற்கு மாற்றுதல் குறித்த SEBI திட்டம்

June 22 , 2025 12 days 50 0
  • இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆனது அதன் வெளிநாட்டில் உள்ள இந்திய நிறுவனத்தின் உரிமத்தினை மீண்டும் இங்கு இந்தியாவிற்கு மாற்றுதல் (Reverse flipping) மற்றும் ஊழியர் பங்கு உரிமைத் திட்டம் (ESOP) விதிமுறைகளில் பல மாற்றங்களை அங்கீகரித்தது.
  • இது புத்தொழில் நிறுவனங்களுக்கான புதியப் பங்கு வெளியீட்டு (IPO) செயல்முறை என்பதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய நிறுவனத்தின் உரிமத்தினை மீண்டும் இந்தியாவிற்கு மாற்றுதல் என்பது ஒரு இந்தியப் புத்தொழில் நிறுவனத்தின் உரிமையை ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பில் இருந்து இந்தியாவிற்கு மாற்றும் செயல்முறையாகும்.
  • முன்னதாக, பொதுப் பங்குகள் வெளியீட்டில் விற்பனைக்கான முன்மொழிவு என்பது அங்கீகரிக்கப் பட்ட திட்டங்களின் கீழ் வாங்கப்பட்ட பங்குகளுக்கு ஓராண்டு குறைந்த பட்ச வைப்புக் காலத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்