உச்ச நீதிமன்றம் ஆனது M C மேத்தா மற்றும் இந்திய ஒன்றியம் வழக்கில், 1996 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அதன் உத்தரவின் மீறல்கள் தொடர்பான காரணம் கேட்புக் குறிப்பாணைகளை வெளியிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு உத்தரவானது, நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் மலை முகட்டு நிலம் ஆனது ஆக்கிரமிப்பு மற்றும் வனம் சாராதப் பயன்பாட்டிலிருந்துப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியது.
டெல்லி முகட்டுப் பகுதியானது, அந்த நகரின் பண்டைய ஆரவல்லி மலைத்தொடரின் கடைநிலை முனை மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மண்டலம் ஆகும்.
இது இந்தத் தலைநகரின் ஒரு பசுமை நுரையீரலாகவும் (இயற்கைப் பகுதி), பாலைவன மாக்கல் மற்றும் மாசுபாடு போன்ற ஆபத்துகளிலிருந்து இப்பகுதியைக் காக்கும் ஓர் இயற்கை அரணாகவும் செயல்படுகிறது.
மஹிபால்பூரின் தெற்கிலிருந்து துக்ளகாபாத்தின் தென்கிழக்கே சுமார் 35 கி.மீ. வரை நீண்டுள்ள இந்த மலைமுகட்டு நிலமானது, யமுனை நதியின் மேற்குக் கரையில் உள்ள வஜிராபாத் வரை பரவிக் காணப் படுகிறது.