TNPSC Thervupettagam

உருவாகும் நெகிழிக் கழிவு மேலாண்மைத் திறனை விஞ்சும் தின அறிக்கை

April 17 , 2024 13 days 121 0
  • EA எர்த் ஆக்சன் எனப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின் இலாப நோக்கற்ற அமைப்பானது, நெகிழிக் கழிவு உற்பத்தியானது உலகக் கழிவு மேலாண்மைத் திறனை விஞ்சும் தின அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலக நெகிழி கழிவு உற்பத்தியானது 2021 ஆம் ஆண்டு முதல் 7.11 சதவீதம் அதிகரித்து உள்ளது.
  • இந்த ஆண்டில் உலகளவில் 220 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்ற நிலையில் அதில் 70 மில்லியன் டன்கள் சுற்றுச் சூழலை மாசுபடுத்தக்கூடியவையாகும்.
  • புவியில் தவறான முறையில் கையாளப்படும் நெகிழிக் கழிவுகளில் 60 சதவீதத்திற்குக் காரணமான 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
  • ஆனால் அதன் தனிநபர் நெகிழிக் கழிவு உற்பத்தியானது ஆண்டிற்கு சுமார் 8 கிலோ அளவிலான தனிநபர் நெகிழி உற்பத்தி என்ற அளவில் உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது.
  • இந்தியாவின் தவறாக நிர்வகிக்கப்படும் நெகிழிக் கழிவுகள் ஆனது, சீனாவின் ஐந்தில் ஒரு பங்கிற்கும், அமெரிக்காவின் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது.
  • நெகிழிக் கழிவுகளை உற்பத்தி செய்வதில் பெல்ஜியம் நகரம் முதலிடத்தில் உள்ளது என்பதோடு அங்கு ஒரு நபரினால் உருவாக்கப்படும் வருடாந்திரக் கழிவு உற்பத்தி 147.7 கிலோ ஆகும்.
  • இது இந்தியாவை விட 16 மடங்கு அதிகம் ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டில், தவறான முறையில் கையாளப்படும் நெகிழிக் கழிவுகளின் அளவின் அடிப்படையில் ஓமன் நாடானது ஒரு நபருக்கு 111 கிலோ என்ற அளவுடன் உலக நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இது நார்வே நாட்டின் அளவை விட 30 மடங்கு அதிகம் ஆகும்.
  • இதில் இந்தியா கடைசி 12 நாடுகளுள் ஒன்றாக உள்ளது.
  • ஒவ்வொரு நாட்டிற்குமான "நெகிழிக் கழிவு உற்பத்தியானது உலகக் கழிவு மேலாண்மைத் திறனை விஞ்சும் தினம்" உள்ளது.
  • இது அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெகிழிக் கழிவுகளின் அளவு மற்றும் அதை மேலாண்மை செய்யும் திறன் ஆகியவற்றினை நன்கு அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப் படுகிறது.
  • இந்தியாவில் நெகிழிக் கழிவு உற்பத்தியானது உலகக் கழிவு மேலாண்மைத் திறனை விஞ்சும் தினம் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்