மத்தியப் பிரதேசத்தில் உள்ள உர்தான் மற்றும் திரௌலி நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக நிலக்கரி அமைச்சகம் அறிவித்து உள்ளது.
வணிக ரீதியான நிலக்கரி ஏல முறையின் கீழ் உற்பத்தியைத் தொடங்கிய இந்தியாவின் முதல் நிலத்தடி நிலக்கரிச் சுரங்கம் என்ற பெருமையை உர்தான் பெற்று உள்ளது.
தாராளமயமாக்கப்பட்ட வணிக ரீதியான நிலக்கரிச் சுரங்கக் கொள்கையின் கீழ், திறந்த சந்தையில் விற்கக்கூடிய கற்கரி அல்லாத நிலக்கரியை இந்த இரண்டு சுரங்கங்களும் உற்பத்தி செய்கின்றன.
கோண்ட்வானா நிலக்கரிப் படுகையில் அமைந்துள்ள இந்தச் சுரங்கங்களில் இந்தியாவின் பெரும்பாலான கருப்பு நிலக்கரி இருப்புக்கள் காணப்படுகின்றன.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, நிலத்தடி சுரங்கப் பணிகள் மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.