உலக சுகாதார அமைப்பானது, கென்யாவைப் பொது சுகாதாரப் பிரச்சினையாக விளங்கிய மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸ் பாதிப்பு இல்லாத நாடாக சான்றளித்துள்ளது.
உறக்க நோயை நீக்குவதில் இந்த மைல்கல்லை எட்டிய 10வது நாடாக கென்யா மாறியது.
மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸ் ஆனது, பாதிக்கப்பட்ட செட்சி ஈக்களால் பரவும் புரோட்டோசோவா ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது.
இந்த நோய் ஆனது காய்ச்சல், தலைவலி, மூட்டு வலியை ஏற்படுத்துகிறது மற்றும் நோய் முற்றிய நிலைகளில் குழப்பம், தூக்கக் கோளாறு மற்றும் நடத்தை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
கென்யா நாடானது, முன்னதாக கினியா புழு நோயை ஒழித்ததோடு 2018 ஆம் ஆண்டில் அந்நாடு அந்த நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டதாகச் சான்றளிக்கப்பட்டது.