உறுதிபடுத்தப்பட்ட பாதுகாப்பு / புலிகளின் தரநிலைகளில் இந்தியாவின் 14 புலிகள் காப்பகங்கள்
August 2 , 2021 1474 days 592 0
இந்தியாவிலுள்ள 14 புலிகள் காப்பகங்களானது உலகளாவிய உறுதிபடுத்தப்பட்ட பாதுகாப்பு/புலிகளின் தரநிலைகளின் அங்கீகாரத்தை (Conservation Assured / Tiger Standards – CA/TS) பெற்றுள்ளன.
அந்த 14 புலிகள் காப்பகங்கள் : அசாமில் உள்ள மனாஸ், காசிரங்கா, ஒராங்; மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாத்பூரா, கன்ஹா, பன்னா; மகாராஷ்டிராவில் உள்ள பெஞ்ச்; பீகாரில் உள்ள வால்மீகி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள துத்துவா, மேற்கு வங்காளத்தின் சுந்தரவனக்காடுகள்; கேரளாவில் உள்ள பரம்பிக்குளம்; கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை, ஆனைமலை ஆகியன ஆகும்.
2013 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட CA/TS (Conservation Assured | Tiger Standards) என்ற அங்கீகாரமானது உலகளாவியப் புலிகள் வாழிட நாடுகள் என்ற கூட்டமைப்பினால் ஓர் அங்கீகாரத் தரநிலையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது இங்கு நிர்ணயிக்கப்பட்ட இனங்களின் தரமான மேலாண்மைக்காக வேண்டி குறைந்தபட்ச தரநிலைகளை நிர்ணயித்து அது தொடர்பான வளங்காப்பு பகுதிகளில் இந்தத் தரநிலைகளின் மதிப்பீட்டினையும் மேற்கொள்ளச் செய்கிறது.