இந்தியாவில் ஜனநாயகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் சூழலில், தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையை முன்மொழியும் ஒரு தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
திரும்பப் பெறும் உரிமை என்பது ஒரு ஜனநாயக அரசியல் முறையாகும் என்பதோடு, இது வாக்காளர்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதியை அவர்கள் பதவிக் காலம் முடிவதற்குள் நீக்க அனுமதிக்கிறது.
இந்த யோசனையை இந்தியாவில் 1944 ஆம் ஆண்டு எம்.என். ராய் முன்மொழிந்தார், என்பதோடுபின்னர் 1974 இல் இதனை ஜெயபிரகாஷ் நாராயண் ஆதரித்தார்.
தேசிய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) ஆகியோரை திரும்ப அழைக்கும் உரிமை இல்லை.
பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்கள் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் திரும்பப் பெறும் உரிமை விதிகளை அமல்படுத்தியுள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951) பொதுமக்களின் அதிருப்தியின் பேரில் அல்லாமல் சட்டப்பூர்வ குற்றங்களுக்கு மட்டுமே பிரதிநிதிகளை நீக்க அனுமதிக்கிறது.