TNPSC Thervupettagam

உறையிடப்பட்ட ஆவணச் சமர்ப்பிப்பு குறித்த உச்சநீதிமன்ற கருத்து

April 14 , 2023 843 days 339 0
  • இந்தியத் தலைமை நீதிபதி (CJI) தலைமையிலான ஒரு அமர்வானது, மத்திய அரசின் "இரகசியமான" ஆவணச் சமர்ப்பிப்பினை ஏற்க முடியாது என்று கூறியது.
  • ஒரே பதவி நிலை ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பான கருத்து வழங்கலின் போது இது கூறப்பட்டது.
  • நீதிமன்றத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டியதன் ஒரு அவசியத்தினைத் தலைமை நீதிபதி அவர்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
  • உறையிடப்பட்ட ஆவணச் சமர்ப்பிப்பு என்பது நீதிபதிகளால் மட்டுமே ஆய்வு செய்யப் படக்கூடிய வகையில், அரசாங்க அமைப்புகளிடமிருந்துத் தகவல்களை உறையிடப் பட்ட வகையில் கோருகின்ற மற்றும் அதைப் பெறுகின்ற ஒரு நடைமுறை ஆகும்.
  • முந்தையக் காலங்களில் உச்ச நீதிமன்றம் மற்றும் சில சமயங்களில் கீழ்நிலை நீதிமன்றங்களும் இந்த நடைமுறையினைப் பின்பற்றியுள்ளன.
  • இரண்டு வகையான நிகழ்வுகளில் இந்த நடைமுறையினைப் பயன்படுத்தலாம்:
    • தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையுடன் தொடர்புடைய தகவலைப் பெறுவதற்கும்,
    • அந்தத் தகவல் தனிப்பட்டதாகவோ அல்லது இரகசியமானதாகவோ இருக்கும் பட்சத்தில்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்