TNPSC Thervupettagam

உற்பத்தி இடைவெளி அறிக்கை 2025

September 29 , 2025 3 days 37 0
  • ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் ஆனது, பருவநிலைப் பகுப்பாய்வு மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான சர்வதேச நிறுவனம் ஆகியவை இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது, உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பில் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் அதிக புதைபடிவ எரிபொருட்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  • வெப்பமயமாதலை 1.5°C ஆகக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, 2030 ஆம் ஆண்டிற்குள் 120% அதிக புதைபடிவ எரிபொருட்களை உற்பத்தி செய்ய அரசாங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
  • திட்டமிடப்பட்ட நிலக்கரி உற்பத்தியானது 2030 ஆம் ஆண்டிற்குள் பருவநிலைக்கு ஏற்ற அளவை விட 500% அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் எண்ணெய் உற்பத்தி 31% மற்றும் எரிவாயு உற்பத்தி 92% அதிகமாக இருக்கும்.
  • நிலக்கரி உற்பத்தியானது 2035 ஆம் ஆண்டிற்குள் உயரும் என்றும் மேலும் எரிவாயு உற்பத்தி 2050 ஆம் ஆண்டு வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • கணக்கெடுப்பு செய்யப்பட்ட 20 முக்கியப் புதைபடிவ எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுள், 17 நாடுகள் 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது ஒரு புதைபடிவ எரிபொருளின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
  • பருவநிலை இலக்குகள் இருந்தபோதிலும் எரிவாயு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை 13 நாடுகள் எதிர்பார்த்து வருகின்றன.
  • 6 நாடுகள் மட்டுமே நிகரச் சுழிய உமிழ்வு இலக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்திச் சூழல்களை உருவாக்கி வருகின்றன; மேலும் பெரும்பாலானவை சீரற்ற விரிவாக்கத் திட்டங்களையே தொடர்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்