TNPSC Thervupettagam

உற்பத்தி செலவின விதிமுறைகளை நிர்ணயித்தல், 2025

May 13 , 2025 16 hrs 0 min 17 0
  • இந்தியப் போட்டி ஆணையம் (CCI) ஆனது, உற்பத்திச் செலவை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது.
  • இது விரைவு வழி வர்த்தகம் மற்றும் இணைய வழி வணிகத் துறைகளில் கூறப்படும் செலவினத்தினை விடக் குறைவான விலை நிர்ணயம் மற்றும் அதிகத் தள்ளுபடி நடைமுறைகளை திறம்பட மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒரு முன்னணி நிறுவனம் ஆனது அதன் போட்டி நிறுவனத்தினை அகற்றுவதற்காக உற்பத்திச் செலவினங்களுக்குக் கீழே விலைகளை நிர்ணயிக்கும் போது இத்தகைய செலவினத்தினை விடக் குறைவான விலை நிர்ணயம் நிர்ணயிக்கப்படுகிறது.
  • போட்டி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டவுடன், இந்த நிறுவனம் அதன் விலைகளை உயர்த்தலாம்.
  • போட்டி தன்மைக்கு எதிரானதாகக் கருதப்படுகின்ற இந்த நடைமுறையானது, 2002 ஆம் ஆண்டு போட்டிச் சட்டத்தின் 4(2)(a)(ii) வது பிரிவின் கீழ் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்