எச்ஐவி (மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்) என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை, குறிப்பாக தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும் CD4 செல்களைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும்.
இந்த நாள் முதன்முதலில் 1988 ஆம் ஆண்டில் உலகின் முதல் உலகளாவிய சுகாதாரத் தினமாகக் கொண்டாடப்பட்டது.
தடுப்பு, பரிசோதனை, சிகிச்சை மற்றும் எச்ஐவி பாதிப்புடன் வாழும் மக்களை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Overcoming disruption, transforming the AIDS response” என்பதாகும்.
2024 ஆம் ஆண்டில், சுமார் 40.8 மில்லியன் மக்கள் எச்ஐவி பாதிப்புடனும் மேலும் 1.3 மில்லியன் பேர் தொடர்பினால் ஏற்பட்ட எச்ஐவி பாதிப்புடனும் வாழ்ந்து வந்தனர்.