மஹிந்திரா XUV 700 வாகனமானது சமீபத்திய உலக NCAP (New Car Assessment Program) விபத்துச் சோதனையில் 5 நட்சத்திரத் தரத்தைப் பெற்றது.
இந்த வாகனமானது முதிர்பருவப் பயணிகள் பிரிவில் 5 நட்சத்திரங்களையும், குழந்தைகள் பயணிகள் பிரிவில் 4 நட்சத்திரங்களையும் பெற்றது.
தன்னிச்சையான அவசர தடைக்கருவியை ஒரு பாதுகாப்பு வசதியாக வழங்கிய, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய நாட்டிற்குச் சொந்தமான முதல் நிறுவனமாக மஹிந்திரா மாறியுள்ளது.
மஹிந்திரா XUV 300 கார் ஆனது முதிர்பருவப் பயணிகளுக்கு 5 நட்சத்திரங்களுடனும் குழந்தைப்பருவப் பயணிகளுக்கு 4 நட்சத்திரங்களுடனும் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் வாகனமானது முதிர்பருவப் பயணிகளுக்கு 5 நட்சத்திரத் தரத்துடனும் குழந்தைப் பருவப் பயணிகளுக்கு 3 நட்சத்திரத் தரத்துடனும் ஒரு வலுவான இடத்தைப் பெற்றுள்ளது.
புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (New Car Assessment Program) என்பது உலகம் முழுவதும் உள்ள வாகனங்களின் பாதுகாப்புப் பகுதிகளை உறுதி செய்வதற்கான ஓர் உலகளாவிய வாகனப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பாகும்.
இது ஐக்கிய ராஜ்ஜியத்தில் பதிவு செய்யப்பட்ட ‘Towards Zero Foundation’ என்ற ஒரு அறக்கட்டளையின் ஒரு முக்கியத் திட்டமாகும்.