TNPSC Thervupettagam

உலக அகதிகள் தினம் 2026 - ஜூன் 20

June 23 , 2026 11 days 70 0
  • அகதிகளை கௌரவிப்பதையும், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஆணையத்தின் (UNHCR) தரவுகளின்படி, உலகளவில் சுமார் 117.3 மில்லியன் மக்கள் மோதல், துன்புறுத்தல் மற்றும் வன்முறை காரணமாக வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  • மில்லியன் கணக்கான அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த நபர்களுடன் மிகப்பெரிய இடப்பெயர்வு நிலைமையாக சூடான் மாறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
  • கிட்டத்தட்ட 71% அகதிகளுக்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் புகலிடம் அளித்துள்ளன, அதேசமயம் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் சுமார் 25% பேருக்கு புகலிடம் அளித்துள்ளன.
  • இடம்பெயர்ந்த நான்கில் மூன்று பேர் பருவநிலை தொடர்பான அபாயங்களுக்கு அதிகம் உள்ளாகும் பகுதிகளில் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது என்பதோடு இது அவர்களின் பாதிப்பையும் அதிகரிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Solidarity with Refugees என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்