உலக அரசாங்கங்கள் உச்சி மாநாடு 2026 ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றது.
இந்த உச்சிமாநாட்டின் கருத்துரு “உலகளாவிய ஆளுகை மற்றும் திறமையான தலைமைத்துவம்” என்பதாகும்.
சர்வதேச ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் திறமையான பொது நிர்வாகத்தை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்.
ஆளுகை, செயற்கை நுண்ணறிவு (AI), பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் பொதுத் துறை புத்தாக்கம் ஆகியவை முக்கிய கவனம் செலுத்தப்படும் துறைகளாகும்.