உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 19
June 20 , 2023 776 days 279 0
இது அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் (SCD) மற்றும் உலகெங்கிலும் உள்ள தனி நபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரிவாள் உயிரணு சோகை நோய் என்பது அசாதாரண இரத்த சிவப்பணுக்கள் காணப் படும் நிலையினைக் குறிக்கும் ஒரு மரபணு ரீதியிலான இரத்தக் கோளாறு ஆகும்.
இந்நோயில் செல்கள் பிறை அல்லது அரிவாள் வடிவம் மற்றும் இந்த ஒழுங்கற்ற வடிவங்களில் மாறும்.
இது இரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் பல்வேறு உடல்நலச் பாதிப்புகளுக்கு வழி வகுக்கும்.