இந்தத் தினமானது அறிவுசார் சொத்துகள் (IP) எவ்வாறு உலகளாவிய கலை சார்ந்த கண்டுபிடிப்புகள் செழிக்க உதவுகிறது மற்றும் மனித முன்னேற்றத்திற்கு உந்துதலாக அமையும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்குச் செயலூட்டுகிறது என்பதை எடுத்து உரைக்கிறது.
காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள், தொழில்துறை வடிவமைப்புகள், பதிப்புரிமை போன்ற பல்வேறு அறிவுசார் சொத்து உரிமைகள் புதுமை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதில் வகிக்கும் பங்கை இந்தத் தினமானது எடுத்துரைக்கிறது.
1970 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், WIPO உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Intellectual property and music: Feel the beat of IP” என்பதாகும்.