அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா (மறதி நோய்) குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
அல்சைமர் அதிகரிக்கும் நினைவாற்றல் இழப்பு, குழப்பம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
செப்டம்பர் மாதம் முழுவதும் சர்வதேச அளவில் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இந்த நோய் குறித்த திறந்த உரையாடலை ஊக்குவிப்பதற்காக வேண்டி, 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாக, "Ask About Dementia. Ask About Alzheimer’s" என்பது முன்மொழியப்பட்டது.