உலக அளவில் இந்தியாவின் முதலாவது பதக்கம் - சைக்கிள் போட்டி
August 20 , 2018 2592 days 913 0
இந்தியாவின் சைக்கிள் ஓட்டுபவரான எஸ்ஸோ அல்பென் (17) சைக்கிள் போட்டியில் உலக அளவில் இந்தியாவின் முதலாவது பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் அய்கிலேயில் நடைபெற்ற UCI ஜூனியர் டிராக் சைக்கிளிங் உலக சாம்பியன்ஷிப்பில் (UCI Junior Track Cycling World Championships) ஆண்களுக்கான கெய்ரின் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இச்சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இவர் இறுதிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்றவரான செக் குடியரசைச் சேர்ந்த ஜக்குப் ஸ்டாஸ்டினியை விட 0.017 வினாடிகள் பின் தங்கி அப்போட்டியை நிறைவு செய்துள்ளார்.
எஸ்ஸோ அந்தமான் நிகோபாரைச் சேர்ந்தவர். இவர் சைக்கிள் போட்டியில் ஜூனியர் ஸ்பிரிண்ட் பிரிவில் தற்பொழுது உலக அளவில் முதலிடத்தில் உள்ளார்.
எஸ்ஸோ மலேசியாவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான ஆசியான் டிரக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.