TNPSC Thervupettagam

உலக ஆய்வக விலங்குகள் தினம் - ஏப்ரல் 24

April 24 , 2024 12 days 65 0
  • 1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அறிவியல் ஆய்விற்காக உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான தேசியச் சங்கமானது விலங்குப் பரிசோதனைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் உலகின் முதல் அமைப்பாகும்.
  • இது 1973 ஆம் ஆண்டில் மனித ஆராய்ச்சிக்கான லார்ட் டவுடிங் நிதியை (LDF) நிறுவியது.
  • அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியின் மேம்பட்ட விலங்கு சோதனை சாராத முறைகளை ஆதரித்து நிதியளிப்பதை இந்த நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1979 ஆம் ஆண்டில், NAVS உலக ஆய்வக விலங்குகள் தினத்தை நிறுவியது (ஆய்வக விலங்கு தினம் என்றும் குறிப்பிடப் படுகிறது).
  • உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் விலங்குகளுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் மற்றும் அவை கொல்லப்படுவது மீதான கவனத்தை ஈர்ப்பதை இந்த நாள் பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அழகியல், மருத்துவம், விமானப் போக்குவரத்து மற்றும் இராணுவத் தொழில் துறைகளில் கூட விலங்குகள் மீதான பல்வேறு பரிசோதனைகள் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்