இவ்வறிக்கையினை சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (IRENA - International Renewable Energy Agency) முதன்முறையாக கொண்டு வந்துள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள், மொத்த மின்சாரத் தேவைகளில் 90% புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களாலும் அதற்கடுத்து 6% இயற்கை எரிவாயுக்களாலும் மீதமுள்ளவை அணுசக்தியில் இருந்தும் வழங்கப்படும் என்று அவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.
பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் உபயோகத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.