இது சர்வதேச எரிசக்தி முகமையால் (IEA) வெளியிட்ட புதிய அறிக்கையாகும்.
2025 ஆம் ஆண்டில் உலகளாவியத் தூய்மையான எரிசக்தி முதலீடுகள் 2.2 டிரில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிசக்தி முதலீட்டில் சீனாவானது 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2015 ஆம் ஆண்டு முதல் 625 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதன் தூய்மையான எரிசக்தி முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், சீனாவானது சுமார் 100 GW திறன் கொண்ட புதிதான நிலக்கரி எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கு அங்கீகரித்துள்ளது என்பதோடு இது உலகளவில் 2015 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட நிலக்கரி எரிசக்தி சார்ந்த ஆலைகளுக்கான அதிக ஒப்புதல் ஆகும்.
இந்தியாவானது 2015 ஆம் ஆண்டில் சுமார் 13 பில்லியன் டாலராக இருந்த தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீடுகளை 2025 ஆம் ஆண்டில் 37 பில்லியன் டாலராகக் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதே தசாப்தத்தில், அதன் புதைபடிவ எரிபொருள் முதலீடுகளும் சுமார் 41 பில்லியன் டாலரில் இருந்து 49 பில்லியன் டாலராக உயர்ந்தன.
2015 ஆம் ஆண்டில், அணுசக்தி மற்றும் இன்ன பிற தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள் மீதான நாட்டின் செலவினம் 1 பில்லியன் டாலராக இருந்தது என்பதோடு இது 2025 ஆம் ஆண்டில் 6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.