இத்தினமானது, இந்தப் பாதிப்பினால் ஏற்படும் பாதிப்பு நிலைகள் மற்றும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
ஆஸ்துமா என்பது ஒரு நபரின் காற்றுப்பாதைகள் வீங்கி, குறுகி, தடித்து, மிக அதிகப் படியான சளியை உருவாக்கி, சுவாசிப்பதைக் கடினமாக்குகின்ற நாள்பட்ட சுவாசக் கோளாறு ஆகும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் சுமார் 4.55 லட்சம் என்ற உயிரழப்பு எண்ணிக்கையுடன் உலகளவில் சுமார் 26.2 கோடி மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்தியாவில் சுமார் 3.4 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியா உலகின் ஆஸ்துமா பாதிப்பில் 13% பங்கினை மட்டுமே கொண்டிருந்தாலும், உலகளாவிய ஆஸ்துமா உயிரிழப்புகளில் 42% பங்கினைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Make Inhaled Treatments Accessible for ALL" என்பதாகும்.