உலக ஆஸ்துமா தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் உலக ஆஸ்துமா தினம் மே 04 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்பட்டது.
இந்தத் தினமானது உலகம் முழுவதும் ஆஸ்துமா நோய் பற்றியும் அதற்கான மருத்துவ சிகிச்சை பற்றியும் விழிப்புணர்வைப் பரப்புகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “ஆஸ்துமா பற்றிய தவறான கருத்துகளை வெளிக் கொணர்தல்” (Uncovering Asthma Misconceptions) என்பதாகும்.
உலக ஆஸ்துமா தினமானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெடுப்பு (Global Initiative for Asthma – GINA) எனும் அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப் படுகிறது.
1998 ஆம் ஆண்டில்ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற ஆஸ்துமா குறித்த முதல் உலகச் சந்திப்புடன் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் முதல் உலக ஆஸ்துமா தினமானது கொண்டாடப்பட்டது.