TNPSC Thervupettagam

உலக இணையவெளிக் குற்றங்கள் அறிக்கை

April 16 , 2024 14 days 140 0
  • நாடு வாரியாக இணையவெளிக் குற்றங்கள் தொடர்பான பல அச்சுறுத்தல்களை தர வரிசைப் படுத்தும் ஒரு புதிய குறியீடு ஆனது, இணையவெளிக் குற்றங்கள் அதிகம் காணப்படும் இடத்தினை வெளிப்படுத்தும் வகையில் ரஷ்யாவை முதலிடத்தில் தர வரிசைப் படுத்தியுள்ளது.
  • ரஷ்யாவைத் தொடர்ந்து உக்ரைன் மற்றும் சீனா ஆகிய நாடுகளும் அதனைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது.
  • நைஜீரியா, ருமேனியா போன்ற நாடுகளுக்கு அடுத்தப்படியாக ஐக்கியப் பேரரசு 8வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் இணையவெளிக் குற்றங்களால் உலக நாடுகளுக்கு சுமார் 9.22 டிரில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் மேலும் இது 2028 ஆம் ஆண்டில் 13.82 டிரில்லியன் டாலர் ஆக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்