இத்தினமானது இரத்தப் போக்கு தொடர்பான கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
இது 1989 ஆம் ஆண்டில் உலக இரத்த உறையாமைக் கூட்டமைப்பினால் (WFH) நிறுவப் பட்டது.
இந்தத் தேதியானது இந்தக் கூட்டமைப்பின் நிறுவனரான ஃபிராங்க் ஷ்னாபலைக் கௌரவிக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இரத்தக் கட்டிகளை உருவாக்கச் செய்யும் உடலின் திறனைக் குறைத்து நீடித்த ரத்தப் போக்குக்கு வழி வகுக்கச் செய்கின்ற இரத்த உறையாமை நோயானது ஒரு மரபணு / பரம்பரை வழி கடத்து நோயாகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Access for All – Women and Girls Bleed Too" என்பதாகும்.