பாதுகாப்பான (ஆரோக்கியமான) இரத்தத்தின் தேவை பற்றியும் இரத்தமாற்று சிகிச்சைக்குத் தேவையான இரத்தத்தினுடைய உயிர்காக்கும் கூறுகள் பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ரத்தத்தைக் கொடுங்கள், உலகத்தைத் துடிக்க வைப்போம்” (Give blood and keep the world beating) என்பதாகும்.
2021 ஆம் ஆண்டிற்கான உலக இரத்த தான தினத்தை நடத்தும் நகரம் இத்தாலியின் ரோம் நகரமாகும்.
இந்த தினமானது முதல்முறையாக 2005 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செந்நிலவு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
கார்ல் லேண்ட்ஸ்டீனரின் பிறந்த நாளின் நினைவாக ஜுன் 14 ஆம் தேதியானது உலக இரத்த தான தினமாகக் கொண்டாடப் படுகிறது.
ABO என்ற ஒரு இரத்த வகையைக் கண்டறிந்ததற்காக கார்ல் லேண்ட்ஸ்டீனெருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.