உலக இருதயக் கூட்டமைப்பு (WHF) ஆனது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலக இருதய குழாய்க் கோளாறுகள் தொடர்பான சுமார் 10 உயிரிழப்புகளில் 1 உயிர் இழப்பிற்கு தற்போது அதிக BMI காரணமாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில், 878 மில்லியன் இளம் வயதினர் உடல் பருமனுடன் வாழ்ந்தனர், இது 1990 ஆம் ஆண்டில் 194 மில்லியனாக இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் உடல் பருமன் தொடர்பான இருதய நோயால் ஏற்படும் உயிர் இழப்பு இரு மடங்கிற்கும் அதிகமாகும்.
இந்தப் போக்குகள் தொடர்ந்தால், 25 வயதிற்கு மேற்பட்ட இளம் வயதினரில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பேர் 2050 ஆம் ஆண்டில் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பர்.
2021 ஆம் ஆண்டில், 3.7 மில்லியன் உயிரிழப்புகள் அதிக BMI காரணமாக ஏற்பட்டவை ஆகும் என்பதோடு இதில் சுமார் 1.9 மில்லியன் இதய நாளம் சார்ந்த நோய் (CVD) உயிரிழப்புகளும் அடங்கும்.
பெண்கள் மத்தியில் பதிவான உலகளாவிய CVD உயிரிழப்புகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை உடல் பருமனால் ஏற்படுகின்றன. ஆண்களில் இது 8.9% ஆக உள்ளது.
இந்தியாவில், 1990 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் பெண்களிடையே உடல் பருமன் குறைந்தது ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
20 வயதிற்கு மேற்பட்ட இளம் பருவப் பெண்களில் 10% பேர், அதாவது நாட்டில் சுமார் 44 மில்லியன் பேர் உடல் பருமனுடன் வாழ்கின்றனர்.
ஒப்பீட்டளவில், ஆண்களிடையே நிலவும் உடல் பருமன் ஆனது, 1990 ஆம் ஆண்டு முதல் 4.9% அதிகரித்துள்ளது என்பதோடு இது தற்போது 26 மில்லியன் இந்திய ஆண்களை அல்லது இந்தியாவில் உள்ள ஆண்களில் 5% பேரைப் பாதிக்கிறது.
இந்தியாவில் உடல் பருமனான பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனர்.