2025–26 ஆம் ஆண்டில் உலகின் 5வது சிறந்த உணவு நகரமாக மும்பை தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
இந்தத் தரவரிசை டேஸ்ட்அட்லஸ் உலக உணவு விருதுகள் 2025–26 விருதுகளின் ஒரு பகுதியாகும்.
நேபிள்ஸ், மிலன், போலோக்னா, புளோரன்ஸ், ஜெனோவா மற்றும் ரோம் ஆகிய இத்தாலிய நகரங்கள் முதல் 10 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
மும்பை அதன் சுவை மிகு தெருவோர உணவுகளான வடா பாவ், பாவ் பாஜி, பேல்பூரி, ரக்தா பாட்டிஸ் மற்றும் மோடக் ஆகியவற்றிற்கு பிரபலமானது.
உலகின் முதல் 100 இடங்களில் டெல்லி (48), அமிர்தசரஸ் (53), ஐதராபாத் (54), கொல்கத்தா (73), சென்னை (93) ஆகிய ஆறு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
உள்ளூர் உணவின் நம்பகத் தன்மை, பிராந்திய உணவுகளின் புகழ் மற்றும் உலகளாவிய உணவுப் பிரியர்கள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் நகரங்கள் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.