வெவ்வேறு உணவுப் பழக்கங்களால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இந்த ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் கருத்துரு, “ஆரோக்கியமான நாளைக்கான பாதுகாப்பான இன்றைய உணவு” என்பதாகும்.
உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து 2017 ஆம் ஆண்டு முதல் இந்த நாளினை அனுசரிப்பதற்கான முடிவினை மேற்கொண்டது.