இது உலக உயர் இரத்த அழுத்த மன்றத்தினால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப் படுகிறது.
இது உயர் இரத்த அழுத்த நோய், அதனைத் தடுத்தல், அதனைக் கண்டறிதல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துதல் குறித்த ஒரு விழிப்புணர்வினைப் பரப்புவதற்காக வேண்டி கடைபிடிக்கப் படுகிறது.
இதய நோய் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணி உயர் இரத்த அழுத்தமாகும்.
இத்தினமானது 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.
உயர் இரத்த அழுத்தமானது ஒரு “அமைதியான கொலையாளி” (சைலன்ட் கில்லர்) எனவும் அழைக்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான இந்நாளின் கருத்துரு, “உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், கட்டுப்படுத்துங்கள், நீண்ட நாள் வாழுங்கள்” (Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer) என்பதாகும்.