TNPSC Thervupettagam

உலக உயிரி இந்தியா 2021

March 5 , 2021 1535 days 623 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புவி அறிவியல் மற்றும் சுகாதார & குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அமைச்சரான டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் காணொலி வாயிலாக புதுதில்லியில் உலக உயிரி இந்தியா-2021 என்பதின் 2வது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
  • மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் கருத்தரங்கானது உலக சமுதாயத்திற்கும்  தேசிய அளவில் இந்தியாவிற்கும் தேசிய உயிரித் தொழில்நுட்பத் துறையின் வாய்ப்புகள் மற்றும் உறுதித் தன்மையை எடுத்துக் காட்ட இருக்கின்றது.
  • மூன்று நாட்கள் கால அளவுள்ள இந்த நிகழ்ச்சியானது டிஜிட்டல் தளம் வாயிலாக 2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “வாழ்க்கையை மாற்றுதல்” (Transforming lives) என்பதாகும். இதன் குறிச் சொல், “உயிரி அறிவியலிலிருந்து உயிரிப் பொருளாதாரம்” (Biosciences to Bio-economy) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்