புதைபடிவ எரிபொருட்களுக்கு புதுப்பிக்கத்தக்க மாற்றாக உயிரி எரிபொருட்களை ஊக்குவிப்பதுடன், தூய்மையான போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பை ஆதரிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நாள் இந்தியாவில் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் அனுசரிக்கப்பட்டது.
இது 1893 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று சர் ருடால்ப் டீசல் கடலை எண்ணெயைப் பயன்படுத்தி ஒரு இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கியதை நினைவு கூருகிறது.
பயிர்கள், விவசாய கழிவுகள், விலங்கு கழிவுகள், பாசிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்ற உயிரிப் பொருட்களிலிருந்து உயிரி எரிபொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
முக்கிய வகைகளில் உயிரி எத்தனால், உயிரி டீசல், உயிரி-CNG (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் மேம்பட்ட உயிரி எரிபொருட்கள் ஆகியவை அடங்கும்.