இந்த நாள் ஆனது விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உறுப்பு கொடையாளர்களைக் கௌரவித்தல் மற்றும் உறுப்பு தானம் மற்றும் தேவை இடையிலான இடைவெளியைக் குறைக்க உறுப்பு தானம் செய்வதற்குப் பதிவு செய்ய மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1954 ஆம் ஆண்டில் ரொனால்ட் லீ ஹெரிக் தனது இரட்டை சகோதரருக்கு சிறுநீரகத்தை தானம் செய்த முதல் உயிருள்ள உறுப்பு கொடையாளர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை நினைவு கூரும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Answering the Call" என்பதாகும்.
இந்தியாவில், தேசிய உறுப்பு தான தினம் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 27 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியாவின் முதல் வெற்றிகரமான சடல உறுப்பு தானம் மூலமான இதய மாற்று அறுவை சிகிச்சையை நினைவு கூரும் வகையில் 2023 ஆம் ஆண்டு முதல் இது ஆகஸ்ட் 03 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.