உலக உள்நாட்டு (சிவில்) பாதுகாப்பு தினம் - மார்ச் 1
March 2 , 2020 2301 days 931 0
இந்தத் தினமானது 1990 ஆம் ஆண்டில் சர்வதேச உள்நாட்டு (சிவில்) பாதுகாப்பு அமைப்பினால் (International Civil Defence Organisation – ICDO) ஏற்படுத்தப் பட்டது.
இந்தத் தினமானது 1972 ஆம் ஆண்டில் ICDO அரசியலமைப்பானது அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாக நடைமுறைக்கு வந்ததை குறிக்கின்றது.
சிவில் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதும் பேரழிவுகளுக்கு எதிராகப் போராடுவதற்குப் பொறுப்பான அனைத்துச் சேவைகளின் முயற்சிகள், தியாகங்கள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இந்த ஆண்டின் இந்தத் தினத்தின் கருப்பொருள், “குழந்தைகளின் பாதுகாப்பு, நமது பொறுப்பு” என்பதாகும்.