உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரம் - அக்டோபர் 24 முதல் 30 வரை
October 29 , 2022 1025 days 366 0
மக்கள், ஊடகங்கள், எண்ணிம தளங்கள், அரசுகள், தனியார் துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீது இது கவனம் செலுத்துகிறது.
இந்த ஆண்டு உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரத்திற்கான கருத்துரு, "நம்பிக்கையை உருவாக்குதல்: ஒரு ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவின் அவசியம்" என்பதாகும்.
11வது உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு (MIL) வாரம் நைஜீரியா நாட்டினால் ஏற்பாடு செய்யப்படுவதோடு அபுஜா நகரில் அனுசரிக்கப்படுகிறது.
முதல் உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரம் ஆனது 2011 ஆம் ஆண்டில் மொராக்கோவின் ஃபெஸ் நகரில் அனுசரிக்கப்பட்டது.