TNPSC Thervupettagam

உலக ஏரிகள் தினம் 2026 - ஆகஸ்ட் 27

August 29 , 2026 15 days 78 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) இந்த நாளை அங்கீகரித்து, 2025 ஆம் ஆண்டில் முதன்முதலாக உலகளவில் கடைபிடிக்கப்பட்டது.
  • ஏரிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் நிலையான மேலாண்மையை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நன்னீர் வழங்கல், பல்லுயிர்த் தன்மை பெருக்கம், பருவநிலை ஒழுங்குமுறை, வாழ்வாதாரம் மற்றும் வெள்ள மேலாண்மை ஆகியவற்றிற்கு ஏரிகள் முக்கியமானவை.
  • மாசுபாடு, அதிகப்படியான நீர் பயன்பாடு, விவசாயக் கழிவுகள், பருவநிலை மாற்றம் மற்றும் வாழ்விடச் சீரழிவு ஆகியவை முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
  • பைக்கால் ஏரி உலகின் மிக ஆழமான நன்னீர் ஏரியாகும், அதே சமயம் சுப்பீரியர் ஏரி பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்