TNPSC Thervupettagam

உலக கருச்சிதைவு மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு நினைவு தினம் 2025 - அக்டோபர் 15

October 20 , 2025 16 hrs 0 min 7 0
  • கருச்சிதைவு மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எதிர்கால இழப்புகளைக் குறைக்க கல்வி மற்றும் தடுப்பு பராமரிப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றினை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்தினத்தின் அனுசரிப்பு ஆனது, 2002 ஆம் ஆண்டு ராபின் பியர், லிசா பிரவுன் மற்றும் டாமி நோவக் ஆகியோரால் ஒரு மனு மூலம் தொடங்கப்பட்டது.
  • இது 2006 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.
  • உலகளவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் இறந்து பிறக்கச் செய்ன்றன என்ற நிலையில் அதில் பல காரணங்கள் தடுக்கக் கூடியவையாக இருந்தாலும் கூட சுமார் 26% வரையிலான கர்ப்பங்கள் கருச்சிதைவு அல்லது பச்சிளம் குழந்தை இறப்பில் முடிகின்றன.
  • கருச்சிதைவு சார்ந்த ஆபத்து ஆனது 8.9% (வயது 20 முதல் 30) சதவீதத்திலிருந்து 74.7% (வயது 40+) என தாயின் வயதைப் பொறுத்து அதிகரிக்கிறது என்பதோடு மேலும் முந்தைய கருச்சிதைவு நிகழ்வுகளும் எதிர்கால இழப்பு அபாயங்களை மேலும் அதிகரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்