உலக கருச்சிதைவு மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு நினைவு தினம் 2025 - அக்டோபர் 15
October 20 , 2025 11 days 62 0
கருச்சிதைவு மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எதிர்கால இழப்புகளைக் குறைக்க கல்வி மற்றும் தடுப்பு பராமரிப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றினை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினத்தின் அனுசரிப்பு ஆனது, 2002 ஆம் ஆண்டு ராபின் பியர், லிசா பிரவுன் மற்றும் டாமி நோவக் ஆகியோரால் ஒரு மனு மூலம் தொடங்கப்பட்டது.
இது 2006 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.
உலகளவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் இறந்து பிறக்கச் செய்ன்றன என்ற நிலையில்அதில் பல காரணங்கள் தடுக்கக் கூடியவையாக இருந்தாலும் கூட சுமார் 26% வரையிலான கர்ப்பங்கள் கருச்சிதைவு அல்லது பச்சிளம் குழந்தை இறப்பில் முடிகின்றன.
கருச்சிதைவு சார்ந்த ஆபத்து ஆனது 8.9% (வயது 20 முதல் 30) சதவீதத்திலிருந்து 74.7% (வயது 40+) என தாயின் வயதைப் பொறுத்து அதிகரிக்கிறது என்பதோடுமேலும் முந்தைய கருச்சிதைவு நிகழ்வுகளும் எதிர்கால இழப்பு அபாயங்களை மேலும் அதிகரிக்கிறது.