TNPSC Thervupettagam

உலக கல்லீரல் அழற்சி நோய் குறித்த அறிக்கை, 2024 – WHO

April 14 , 2024 33 days 161 0
  • 2022 ஆம் ஆண்டில் சீனாவிற்கு அடுத்தபடியாக 3.5 கோடி நோய்த்தொற்றுகளுடன் B மற்றும் C வகை கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • அந்த ஆண்டு உலக அளவிலான மொத்த நோய்ப் பாதிப்பில் இந்தியாவின் பங்கு 11.6% ஆக இருந்தது.
  • கல்லீரலில் ஏற்படும் ஒரு வீக்கமான கல்லீரல் அழற்சி என்பது பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும்.
  • 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 254 மில்லியன் மக்கள் B வகை கல்லீரல் அழற்சி மற்றும் 50 மில்லியன் பேர் C வகை கல்லீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.98 கோடி B வகை கல்லீரல் அழற்சி பாதிப்புகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்ற அதே நேரத்தில் C வகை கல்லீரல் அழற்சி நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 55 லட்சமாக இருந்தது.
  • சீனாவில் 8.3 கோடி எண்ணிக்கையிலான B மற்றும் C வகை கல்லீரல் அழற்சி நோய்ப் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து மொத்த நோய் பாதிப்பு எண்ணிக்கையில் சீனா 27.5% பங்கினை கொண்டுள்ளது.
  • கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுத்தும் வைரஸின் ஐந்து முக்கிய திரிபுகள் உள்ள நிலையில் அவை A, B, C, D மற்றும் E என குறிப்பிடப்படுகின்றன.
  • இவை அனைத்தும் கல்லீரல் நோயை ஏற்படுத்தினாலும் அவை பரவும் முறைகள் உள்ளிட்ட முக்கிய பண்புகளில் அவை வேறுபடுகின்றன.
  • B மற்றும் C வகைகள் கோடிக்கணக்கான மக்களில் நாள்பட்ட நோய்ப் பாதிப்பிற்கு வழி வகுக்கும்.
  • B மற்றும் C வகை கல்லீரல் அழற்சி நோய்த் தொற்றுகளால் உலகளவில் தினமும் 3,500 பேர் உயிரிழக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்