இந்த நாள் சுகாதாரம், துப்புரவு, கண்ணியம் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) ஆனது சுலப் இன்டர் நேஷனல் மற்றும் உலக கழிப்பறை அமைப்புடன் இணைந்து 3 நாட்கள் அளவிலான உலக கழிப்பறை உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Sanitation: Collective Responsibility for Dignity and Planet" என்பதாகும்.
இது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் உலகளவில் அங்கீகரிக்கப் பட்டது.
உலக கழிப்பறை தினத்தின் அதிகாரப்பூர்வ அமைப்பாளர் UN-Water ஆகும்.
அதற்கு முன்பு, உலக கழிப்பறை தினம் 2001 ஆம் ஆண்டு உலக கழிப்பறை அமைப்பால் (சிங்கப்பூரில் உள்ள ஒரு அரசு சாரா நிறுவனம்) அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிறுவப் பட்டது.