காண்டாமிருக வளங்காப்பு மற்றும் வேட்டையாடுதல் எதிர்ப்பு முயற்சிகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
உலக காண்டாமிருக தினம் ஆனது வனவிலங்கு வளங்காப்பு ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
பெரிய ஒரு கொம்பு காண்டாமிருகம், கருப்பு நிற காண்டாமிருகம், வெள்ளை நிற காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம் மற்றும் சுமத்ரா காண்டாமிருகம் ஆகிய ஐந்து வகையான காண்டாமிருகங்கள் உள்ளன.
பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் 4,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையுடன் முதன்மையாக இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது.
கருப்பு நிற, ஜாவா மற்றும் சுமத்ரா போன்ற காண்டாமிருக இனங்கள் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக மிகவும் அருகி வருகின்றன.
அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா உலகின் மிக அதிக ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.