இது உலகளவில் காற்று ஆற்றல் தொழில்துறையின் ஒருங்கிணைந்த அமைப்பாகச் செயல்படுகின்ற, காற்றாலை மின் உற்பத்திக்கான சர்வதேச வர்த்தகச் சங்கமாகும்.
உலகளாவியப் பருவநிலை இலக்குகளை அடைய இந்த தசாப்தத்திற்குள் 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 94 GW திறனிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள காற்றாலைகளின் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும்.
சீனாவில் புதிய ஆலைகள் நிறுவப்படுவது குறைந்ததால், 2022 ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட கடல்சார் ஆலைகள் 2019/2020 ஆம் ஆண்டு நிலைமைகளுக்குக் கீழ் குறைய வாய்ப்புள்ளது.