உலக காற்றுத் தர அறிக்கை 2021
March 25 , 2022
1243 days
612
- 2021 ஆம் ஆண்டில், காற்று சுகாதாரமற்ற நிலையை எட்டியதாக உலக காற்றுத் தர அறிக்கை கூறுகிறது.
- “IQ Air” எனும் சுவிட்சர்லாந்து நிறுவனம் இந்த அறிக்கையைத் தயார் செய்தது.
- மேலும், தொடர்ந்து 4வது ஆண்டாக, உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக புதுடெல்லி திகழ்கிறது.
- 2021 ஆம் ஆண்டில் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட நகரங்கள் பட்டியலில் 35 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- இராஜஸ்தானின் பிவாதி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரம் உள்ளது.
- 2021 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பின் காற்றுத் தர நிலைகளை எந்த உலக நாட்டினாலும் பூர்த்தி செய்ய இயலவில்லை என அறிக்கை கூறுகிறது.

Post Views:
612