March 27 , 2026
15 hrs 0 min
45
- IQAir வெளியிட்ட 2025-ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத் தர அறிக்கையில், பாகிஸ்தான் மிகவும் மாசுபட்ட நாடாக முதலிடத்தில் உள்ளது.
- இதைத் தொடர்ந்து வங்கதேசம் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்ற நிலையில் மேலும் இதில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
- PM2.5 துகள்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை கணக்கிடப் படுகிறது.
- நகர அளவில், உத்தரபிரதேசத்தின் லோனி மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது, என்பதோடு இதில் டெல்லி உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.
- உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்துள்ள பாதுகாப்பான காற்றுத் தரத் தர நிலைகளை சுமார் 9 சதவீத நாடுகள் மட்டுமே பூர்த்தி செய்துள்ளன.
Post Views:
45