1990 ஆம் ஆண்டுகளில், தேசிய கேலிச் சித்திர நிபுணர்கள் சங்கம் இந்தத் துறையில் உள்ள ஒவ்வொரு கேலிச் சித்திர நிபுணர்களையும் கொண்டாடுவதற்காக இந்த நாளை அறிவித்தது.
சமூகத்தில் கேலிச் சித்திரங்களின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதையும், கலைத் திறன் மற்றும் வாசிப்பை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
1946 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் தேசியக் கேலிச் சித்திர நிபுணர்கள் சங்கம் (NCS) நிறுவப் பட்டது.
முதன்முதலில் வெளிவந்த "தி யெல்லோ கிட்" எனப்படுகின்ற ஒரு குறும்புக்கார கேலிச் சித்திரக் கதாபாத்திரத்தினை மிக நன்கு அங்கீகரிக்கும் விதமாக இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
இது 1895 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று நியூயார்க் வேர்ல்ட் என்ற செய்தித்தாளில் வெளி வந்தது.