உலக கைபேசி மாநாடானது 2021 ஆம் ஆண்டின் உலகின் ஒரு மிகப்பெரிய கைபேசி சார்ந்த நிகழ்வாகும்.
இது ஜுன் 28 அன்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் தொடங்கப் பட்டது.
உலக கைபேசி மாநாடு என்பது தொலைதொடர்பு தொழில்துறையில் புத்தாக்கத்தினை மையமாகக் கொண்ட ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
இது ‘குளோபல் சிஸ்டம்ஸ் ஃபார் மொபைல் அசோசியேஷன்’ எனும் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
இந்த நிகழ்வில் உலகெங்கிலும் உள்ள முக்கிய தொலைதொடர்பு அமைப்புகள், உபகரண உற்பத்தியாளர்கள், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், வர்த்தக உள்ளீட்டாளர்கள், ஊடகம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.