TNPSC Thervupettagam

உலக கொசு தினம் – ஆகஸ்ட் 20

August 22 , 2026 2 days 89 0
  • கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1897 ஆம் ஆண்டில் பெண் அனாபிலிஸ் கொசுக்கள் மலேரியா ஒட்டுண்ணிகளை மனிதர்களுக்குப் பரப்புகின்றன என்பதைக் கண்டுபிடித்த சர் ரொனால்ட் ரோஸை இந்த நாள் நினைவு கூறுகிறது.
  • சர் ரொனால்ட் ரோஸ், 1857 ஆம் ஆண்டில் இந்தியாவின் அல்மோராவில் பிறந்த ஒரு பிரிட்டிஷ்-இந்திய மருத்துவர் மற்றும் அறிவியலாளர் ஆவார்.
  • மலேரியா குறித்த அவரது பணிக்காக 1902 ஆம் ஆண்டில் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார், இதன் மூலம் மருத்துவத்தில் முதல் பிரிட்டிஷ் நோபல் பரிசு பெற்றவர் ஆனார்.
  • கொசுக்களால் பரவும் முக்கிய நோய்களில் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் நோய் ஆகியவை அடங்கும்.
  • மலேரியா முக்கியமாக நோய்த்தொற்றுக்கு உள்ளான பெண் அனாபிலிஸ் கொசுக்களால் பரவுகிற அதே நேரத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா முக்கியமாக ஏடிஸ் கொசுக்களால் பரவுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்