மக்களுக்கும் இயற்கைக்கும் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஈரநிலங்களில் சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆறுகள், மாங்குரோவ் காடுகள், உப்பங் கழிகள் மற்றும் நெல் வயல்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் ஆகியவை அடங்கும்.
1971 ஆம் ஆண்டு இதே நாளில், ஈரானின் ராம்சார் நகரில் ஈரநிலங்கள் மீதான மாநாடு (ராம்சார் மாநாடு) ஏற்றுக் கொள்ளப் பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு: “Wetlands and Traditional Knowledge: Celebrating Cultural Heritage” என்பதாகும்.